இழந்த தலைமுறை
மூன்று வயது முடிந்த என்
யூ.கே .ஜி . பேரனுக்கு ஸ்கூல் ப்ராஜெக்ட்
கூட்டுக் குடும்பம்பற்றி
என் மகன் சொன்ன இணையதளம்
jointfamily.com
மருமகள் சொன்னது
unitedfamily.org
அவன் டீச்சர் சொன்ன தளம்
wikipedia
மூவரும் ஆளாளுக்கு ஒரு
கம்ப்யுட்டரில் தேட
அதே தள மூலையில்
ஐந்து சகோதரிகள்
ஐந்து சகோதரர்களுடன்
பிறந்து வளர்ந்து வாழ்ந்த
என்னிடம்
ஒரு வார்த்தை கூட கேக்கவில்லை .
(courtesy -- n.harikrishnan)
No comments:
Post a Comment
thankyou for using and keep me be active and informative.